ETV Bharat / sitara

ஹாலிவுட்டில் கதாநாயகனான சென்னை இளைஞர்!

author img

By

Published : Sep 21, 2021, 5:16 PM IST

Updated : Sep 21, 2021, 5:22 PM IST

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

b
b

'டேனில் ரான்சம்' கதை எழுதி இயக்கிய 'ஸ்போக்கன்' (Spoken) என்னும் 'ஹாரர்' படத்தில் சென்னை இளைஞன் எபின் ஆன்டனி நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் சமீபத்தில் அமெரிக்காவில் அமேசான் ப்ரைமில் வெளியானது.

இந்தப் படத்தில் எபின் ஆன்டனி நாயகியைத் துரத்தி காதலிக்கும் இசைக் கலைஞனாக நடித்துள்ளார். சென்னையில் வளர்ந்த இவருக்கு சினிமா நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கவே, கல்லூரியில் படிக்கும்போதே நூறுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலப் படங்களுக்கும் கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார்.

b
எபின் ஆன்டனி

அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைந்தது. அமெரிக்காவில் மேல் படிப்புக்குச் சென்றவர், தன் நடிப்புத்திறனை அதிகரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நடிப்பு கற்று கொண்டார்.

b
ஸ்போகன் பட போஸ்டர்

அதுமட்டுமல்லாது லியானார்டோ டிகாப்ரியோ போன்ற ஆஸ்கர், எமி விருது பெற்ற பிரபலங்களின் பயிற்சி பட்டறையில் சேர்ந்து நடிப்புக் கற்று வருகிறார். எபின் ஆன்டனி தற்போது டாம் லெவினின் ' பார்ட்டி ' என்ற நாவலைத் தழுவி கெவின் ஸ்டீவன்சன் இயக்கிய 'பட்டர் ஃப்ளைஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

g
ஸ்போகன் படத்தின் ஒரு காட்சி

இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஹாலிவுட் படங்ளில் தான் நடித்து வந்தாலும் தமிழ், தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக எபின் ஆன்டனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹாலிவுட் கதைகளத்தில் தமிழ் குறும்படம் 'தர்மன்'!

Last Updated : Sep 21, 2021, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.