ETV Bharat / sitara

மோகன்லாலின் 'மரைக்காயர்': தமிழ் உரிமையை வாங்கிய தாணு

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் தமிழ்நாட்டு வெளியிட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வாங்கியுள்ளார்.

Mohan lal
Mohan lal
author img

By

Published : Nov 18, 2021, 4:51 PM IST

மலையாளத் திரையுலகின் வெற்றிக்கூட்டணியாக கருதப்படும் இயக்குநர் ப்ரியதர்ஷன் - நடிகர் மோகன்லால் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்ய ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் இயக்குநர் ஐ.வி. சசி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். ஆசீர்வாத் சினிமா சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

படத்தில் மோகன்லாலுடன், நடிகர்கள் பிரபு, அர்ஜூன், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, பிரனவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், மஞ்சு வாரியர், சுஹாசினி, அசோக் செல்வன், இன்னோசன்ட் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த விஎஃப்எக்ஸ் (VFX) உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. மலையாளத்தில் உருவாகியுள்ள 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக இதன் வெளியிட்டு தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) படத்தின் தமிழ்நாட்டு வெளியிட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வாங்கியுள்ளார்.

முன்பு மோகன்லால் - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டான 'சிறைச்சாலை' படத்தைத் தமிழில் வெளியிட்ட கலைப்பலி தாணு, தற்போது அதே கூட்டணியில் வரலாற்றுப் படமாக உருவாகியிருக்கும் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படத்தை வெளியிடவுள்ளார்.

இதையும் பாருங்க: 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்' திரைப்பட புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.