சென்னை: அசுரன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
67ஆவது தேசிய விருதுகளில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்துக்கு சிறந்த படம், படத்தின் கதாநாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
இதைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அசுரன் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் கூறியதாவது:
30 ஆண்டுகளுக்கு முன் எனது தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது அவரது சீடன் இயக்கிய படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளதாக எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தாண்டு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன - விஷ்ணு விஷால்