ETV Bharat / sitara

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடுகள் இருக்காது -  ஆர்.கே. சுரேஷ்

author img

By

Published : Nov 5, 2020, 3:19 PM IST

Updated : Nov 5, 2020, 3:29 PM IST

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடுகள் இருக்காது என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

RK Suresh
RK Suresh

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் நலன்காக்கும் அணி சார்பில், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அதில் நாம் எழுப்பிய கேள்வியும் அவர் அளித்த பதிலும் வருமாறு:

கடந்த தயாரிப்பாளர் தேர்தலில் அரசியல் தலையீடுகள் இருந்தது. இப்போது நீங்கள் பாஜகவில் உள்ளீர்கள், இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு இருக்குமா?

அரசியல் தலையீடு இருக்குமா?
கடந்த தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் நான் ஆளும் கட்சி. நான் எதிர்க்கட்சி என்று இரண்டு தரப்பிலும் இருந்தனர். இப்பொழுது நாங்கள் போட்டியிடும் அணியிலும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துதான் உள்ளோம்.
பாஜக, அதிமுக, திமுக என அனைத்தும் கலந்து இருக்கிறோம். எங்கள் அணியில் பார்த்தோமென்றால் கட்சி எல்லாம் தாண்டி தயாரிப்பாளர்கள் என்பது எங்கள் குடும்பம். அந்தக் குடும்பத்தில் ஒரு தேர்தல் வருகிறது என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்.
இதில் நாங்கள் கட்சிகளைப் புகுத்த விரும்பவில்லை. எந்தக் குழப்பமும் இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எது நலமோ, அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். இதில் அரசியல் தலையீடுகள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. இது முழுக்க முழுக்க ஒரு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆக மட்டுமே இருக்கும்.
தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று கூறுகிறீர்கள், இந்தத் தேர்தலில் தயாரிப்பாளரைத் தவிர நடிகர்கள் யாராவது போட்டியிடுகிறார்கள்?
நடிகர்கள் யாராவது போட்டியிடுகிறார்களா?
நீங்கள் கூறுவது சரிதான், நான் வந்து ஒரு நடிகர். இதற்கு முன்பு என்னவாக இருந்தேன் என்றால் படத்தை தயாரித்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் முன்பாக ஒரு விநியோகஸ்தராக இருந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் எல்லா நடிகர்களுமே படம் தயாரிக்கிறார்கள். அதேபோன்று ராஜ்கிரண் சசிக்குமார் போன்ற தயாரிப்பாளர்களும் நடிக்கின்றனர். இதில் நாங்கள் பிரித்துப் பார்க்க முடியாது. இது ஒரு கலைக் குடும்பம், எந்த டிபார்ட்மென்ட் ஆக இருந்தாலும் கலந்துதான் இருக்கும். எதுவுமே தனித்து அல்லது தவிர்த்தோ பார்க்க முடியாது.
உச்சகட்ட நடிகராக இருந்தால் அவர் மீது அதிகமாக இருக்கும். உண்மையிலேயே தயாரிப்பாளர் நலன் கருதி யார் உழைக்கிறார்களோ, திட்டங்களைச் செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், கண்டிப்பாக தயாரிப்பாளர் சங்கம் முன்புபோல் அல்லாமல் அனைத்து விஷயங்களிலும் முனைப்போடு செயல்பட்டு கோல்டன் பீரியடு கொண்டு வரமுடியும்.
நீங்கள் வெற்றிபெற்று வந்தால் கடந்த நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகள் எதெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள்?
கடந்த நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகள் மீண்டும் நடக்குமா?
கடந்த நிர்வாகத்தில் நடந்த தவறுகள் எதுவுமே நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் அணியில் முழுமூச்சாக உள்ளோம். கடந்த நிர்வாகம் சீர்குலையும்போது அதனைத் தெரிந்துகொண்டுதான் நான் வெளியில் வந்தேன். அந்த நிகழ்வுகள் எதுவும் இப்போது நடக்கக் கூடாது என்று முனைப்பாக உள்ளோம்.
அதற்காக நடிகர் விஷால் தவறானவர் என்று நான் கூறவில்லை, அவர் அதிகமான விஷயங்களில் கவனம் செலுத்தியதால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் முழுமூச்சாக அவரால் ஈடுபட முடியவில்லை. அதனால் கடந்த நிர்வாகத்தில் நடந்த பிரச்சினைகள் குளறுபடிகள் நாங்கள் வெற்றிபெற்று வந்தால் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்.
தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் உங்கள் அணியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக கூறுகிறார், இது குறித்து?
உங்கள் அணியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பது குறித்து?
எங்கள் அணியைப் பொறுத்தவரை சங்கத்தின் பல அப்படித்தான் அனைத்தும் நடைபெறுகிறது, அதனால் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் செல்வோம். சட்டம்தான் இந்தத் தேர்தலை நடத்துகிறது. அதனால் அவர்களுக்குத் தெரியும், எது சட்டப்படி உள்ளது என்று - அதன்படி நடக்க முயல்வோம்.
உங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். எங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் வெற்றிபெற்றால் எங்கள் தனிப்பட்ட வெற்றியாக நாங்கள் பார்க்காமல் அனைத்து தயாரிப்பாளர்களின் வெற்றியாகத்தான் பார்ப்போம்
சொல்லாதையும் செய்வோம்

Last Updated : Nov 5, 2020, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.