சென்னை: தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 51. நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் அந்தோணி சேவியர்.
சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலை சுமார் 11 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்வதாகக் கூறப்படுகிறது. நாளை மதியம் அவரின் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.