ETV Bharat / sitara

தாணு ஏமாற்றிவிட்டார் - தயாரிப்பாளர் அன்புச்செல்வன் கண்ணீர்! - சிறு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச்செல்வன்

சிறு தயாரிப்பாளர்களை முன்னணி தயாராப்பாளர்கள் ஏமாற்றிவருவதாக சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தாணு என்னை ஏமாற்றிவிட்டார் - தயாரிப்பாளர் அன்புச்செல்வன் கண்ணீர்

author img

By

Published : Sep 22, 2021, 5:08 PM IST

சென்னை: தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் அன்புச்செல்வன் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினார்.

அப்போது, பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்படும் பட தலைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிக சுலபமாக்கப்படும் என்றும் சிறு முதலீட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நல்வழி காட்டப்படும் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

தாணு என்னை ஏமாற்றிவிட்டார் - தயாரிப்பாளர் அன்புச்செல்வன் கண்ணீர்

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்கள், சிறு தயாரிப்பாளர்களை ஏமாற்றுவதாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, தயாரிப்பாளர் தாணு தன்னை ஏமாற்றியதாகவும், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றிக்காக தங்களை போன்ற தயாரிப்பாளர்களை தாணு பயன்படுத்திக்கொண்டதாகவும் கண்ணீருடன் கூறினார்.

புதிதாக படம் இயக்க, தயாரிக்க வரும் இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு இந்தச் சங்கம் எப்போதும் துணை நிற்கும் என்றும் அன்புச்செல்வன் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஆசையாக வாங்கிய கார் - நிலைக்காத சந்தோஷம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.