திரையுலகப் பிரபலங்கள் நடித்துக் கொண்டே சைடு பிசினஸ் செய்துவருகின்றனர். ஆர்யா உணவகம் நடத்திவருகிறார். விஜய் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுகிறார்.
இந்த வரிசையில் தற்போது புதிதாக நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார். இவர் நியூயார்க்கில் சொந்தமாக 'சோனா' என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய மூன்றாண்டு உழைப்பு இந்த ரெஸ்டாரண்ட். இங்குச் சுவையான உணவு இந்தியச் சமையல்காரர்களால் செய்யப்படுகின்றது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'விக்ரம்' படத்தில் இணைந்த 'கைதி' பிரபலம்