ETV Bharat / sitara

வாடகைத்தாய் மூலம் பெற்றோரான பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி! - குழந்தைக்கு தந்தையான நிக் ஜோனஸ்

வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/22-January-2022/14252130_priyankachopra.jpg

author img

By

Published : Jan 22, 2022, 1:12 PM IST

நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இந்த செய்தியை இருவரும் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜன.22) பகிர்ந்து கொண்டனர்.

அதில், "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்கிறோம் என்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால், இந்த சிறப்பு நேரத்தில் எங்களது பிரைவசியை தரும்படி கேட்கிறோம். மிக்க நன்றி" என இருவரும் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் குழந்தையின் பாலினத்தை தம்பதியினர் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஜோடி பெற்றோராகும் செய்தியை அறிவித்த உடனேயே, சமூக ஊடக பயனர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் போஸ்ட்
பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் போஸ்ட்

பிரியங்காவின் பதிவுக்கு, நடிகை லாரா தத்தா பூபதி "வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கமென்ட் செய்த தயாரிப்பாளர் குனீத் மோங்கா, "ஓ மை காட். இது மிகவும் சிறப்பானது... பெரிய பெரிய வாழ்த்துக்கள். சிறந்த செய்தி" என கூறியுள்ளார்.

பிரியங்கா, நிக் இருவரும் சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு கடந்த டிசம்பர் 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் திரைப்பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.