தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் அதன் பின் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாக, பின் 'மேயாத மான்' படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் 'மான்ஸ்டர்', 'மாஃபியா' உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், பிரியா பவானி சங்கரின் தாத்தா சமீபத்தில் காலமானார். தனது தாத்தாவின் நினைவுகளை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, " தாத்தா! வியாபாரத்தில் வெற்றி கண்டவர். தனி மனிதராக ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐந்து பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்து பத்து பேரப் பசங்களில் எட்டு பேரை மருத்துவர்களாக்கி அவர்களையும் மருத்துவர்களு்ககு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்தில் பெருமையாக வாழ்ந்தவர்.
இறந்து போய் அசையாமல் இருந்த தாத்தாவைப் பாரக்கும் போது மூளையின் ஓரத்தில் எங்கேயோ எப்போதோ புதைந்து மறந்துபோன ஒரு கோடி ஞாபகம். என் தாத்தாவின் மருத்துவக் கல்லூரி செல்லாத ஒரே பேத்தி நான். போனா வாரம் கடைசியாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது உன்னை உன் அப்பா தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளார். என் பெண்ணை நீ நன்றாக பார்த்துக்கொள்வாய் எனத் தெரியும் என்றார். எங்கள் தாத்த எங்களுக்கு எந்தச் சொத்தும் எழுதிவைத்துவிட்டு போகவில்லை.
-
சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021
ஆனால் என்னுடைய முதல் சம்பளத்தில் 1950இல் அன்றைய காசு 24 ரூபாய்க்கு என்னோட அம்மாவுக்கு வாங்கிய தோடு, இதை இனிமேல் நீவைத்துக்கொள் என என்னிடம் கொடுத்தார். அப்போது என் தாத்தாவால் பாராட்டப்பட்டதாக நான் உணர்ந்தேன். உங்கள் அம்மாவின் தோடையும் உங்கள் பெண்ணையும் மாப்பிளையயும் என் உயிரை விடவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன் தாத்தா. நீங்கள் சந்தோஷமா போய்ட்டு வாங்க" என கூறியுள்ளார்.