நடிகர் பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து முதன்\முதலாக இயக்கிய படம் 'லூசிஃபர்'. இப்படத்தில் மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ், இந்திரஜித், விவேக் ஓபராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியான இப்படம், வெளியான சில நாள்களிலேயே 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்தது.
இதன் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தையும் பிரித்விராஜே இயக்கவுள்ளார். இன்னொரு பக்கம் ’ஆடு ஜீவிதம்’, அந்தாதுன் மலையாள ரீமேக் உள்ளிட்ட படங்களிலும் அவ்ர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'பிரோ டாடி' (Bro Daddy) என தலைப்பிடப்பிட்டுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, மீனா, கன்னிகா, முரளி கோபி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
ஆசீர்வாத் சினிமா சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார்.
-
My 2nd directorial. #BRODADDY will once again be headlined by The Lalettan @Mohanlal , with an ensemble cast including yours truly. Produced by #AntonyPerumbavoor (#AashirvadCinemas), a fun family drama that makes you smile, laugh & want to revisit. Rolling soon. Very soon. 😊 pic.twitter.com/uNW75kUciP
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My 2nd directorial. #BRODADDY will once again be headlined by The Lalettan @Mohanlal , with an ensemble cast including yours truly. Produced by #AntonyPerumbavoor (#AashirvadCinemas), a fun family drama that makes you smile, laugh & want to revisit. Rolling soon. Very soon. 😊 pic.twitter.com/uNW75kUciP
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) June 18, 2021My 2nd directorial. #BRODADDY will once again be headlined by The Lalettan @Mohanlal , with an ensemble cast including yours truly. Produced by #AntonyPerumbavoor (#AashirvadCinemas), a fun family drama that makes you smile, laugh & want to revisit. Rolling soon. Very soon. 😊 pic.twitter.com/uNW75kUciP
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) June 18, 2021
லூசிஃபர் போன்று அல்லாமல், நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமாக 'பிரோ டாடி' (Bro Daddy) உருவாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
கரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு விலகியதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட் கேஸ்’ (Cold Case) திரைப்படம் ஜூன் 30ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: மெகா ஸ்டாரை வைத்து இயக்கும் மோகன் ராஜா