ETV Bharat / sitara

தேசிய ஊரடங்கு உத்தரவு: தினக்கூலித்தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் 'மாஸ்' பிரணிதா

தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதரம் பாதித்துள்ள 50 தினக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரணிதா உதவிசெய்ய உள்ளார்.

author img

By

Published : Mar 28, 2020, 11:49 PM IST

Pranitha
Pranitha

தமிழில் 'சகுனி', 'மாஸ்' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரணிதா. தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.

இதனால் தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதித்துள்ளது. தற்போது இவர்களுக்கு உதவும் விதமாக பிரணிதா தனது அறக்கட்டளையான பிரணிதா அறக்கட்டளை மூலமாக உதவ உள்ளார். 50 கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுள்ளார்.

இதுகுறித்து பிரணிதா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரணிதா கூறியதாவது, தேசிய ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதரம் கேள்வி குறியாகியுள்ளது. அரசாங்கம் அதன் பணியைச் செய்து வருகிறது என்றாலும் நாமும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில், ஒரு குடும்பத்திற்கு ரூ 2,000 தேவைப்படுகிறது. நான் 50 குடும்பங்களை தேர்ந்தெடுத்துள்ளேன். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் அளிக்கும் பணம் அவர்களுக்கு மருந்துகள் பிற அத்தியாவசிய பொருட்கள் வாங்க செலவு செய்யப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

இதனிடையே தேசிய ஊரடங்கு உத்தரவால் இது போன்ற தொழிலாளர்களுக்கு உதவும் முதல் நடிகை என்ற பெயரை பிரணிதா பெற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.