ETV Bharat / sitara

'அர்ஜுன் ரெட்டி' இயக்குநருடன் கைக்கோத்த 'ஸ்பிரிட்' பிரபாஸ்!

பிரபாஸின் 25ஆவது படமான 'ஸ்பிரிட்' படத்தை 'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார்.

author img

By

Published : Oct 7, 2021, 1:05 PM IST

prabhas
prabhas

நடிகர் பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்', நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தொடர்ந்து நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் 25ஆவது படம் குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், இன்று (அக். 7) பிரபாஸின் 25ஆவது படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஸ்பிரிட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய் தேவரகொண்டாவை வைத்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்குகிறார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இந்தியில் ரீமேக்கான கபீர் சிங் படத்தை ஷாகித் கபூரை வைத்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கினார். இந்தப் படமும் பாலிவுட்டில் வெற்றி அடையவே அவர் தற்போது ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில், சந்தீப் - பிரபாஸ் கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 'ஸ்பிரிட்' படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ், டி சீரிஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அது மட்டுமல்லாது சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.

'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸுடன் நடிக்கவிருக்கும் நடிகை, துணை கதாாபத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அனிமல்' படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாததால் இதன் படப்பிடிப்பு முடிந்த பின்னரே 'ஸ்பிரிட்' படத்தின் வேலைகள் தொடங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மூன்று படங்கள்; 1,000 கோடி ரூபாய் பட்ஜெட் - வசூல் சாதனை படைப்பாரா பிரபாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.