இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’-இன் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.
இதன் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது எனக் கார்த்தி முன்பே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இன்னும் 50 நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் என தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கார்த்தி அடுத்த வாரம் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்கு அடுத்ததாக ஹைதராபாத் அல்லது மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இப்படம் உருவாகிவருகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ‘வாடிவாசல்’