சென்னை: அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், காவியமான, சீரஞ்சிவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் அஜய் பிரதீப்பின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகிறது.
125 மணி நேரம் ஓடும் முழுநீளத் திரைப்படமாகவே இது எடுக்கப்படவிருக்கிறது. அதை அப்படியே திரைப்படமாக வெளியிடுவது சாத்தியமில்லை என்பதால், வெப் ஃபிலிம் சீரிஸாக பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
முதல் 4 மாதங்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த வெப் சீரிஸ், 4 மாதங்களுக்கு பின்னர், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரம் என மாதம் தலா 8 மணி நேரம் என மொத்தம் 9 சீசன்களாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு சீசனுக்கும் இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸை எடர்னிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடட், எடர்னிட்டி ஸ்டார் இணைந்து இந்த தயாரிக்கிறது.
இப்படத்தின் முழுத் திரைக்கதையும், வசனம், லொக்கேஷன், ஷாட் டிவிஷன் உள்பட அனைத்துத் தொழில்நுட்பக் கூறுகள் புத்தக வடிவில் பதிவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெப் ஃபிலிம் சீரிஸுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து, ஏற்கெனவே ஒரு முன்னணி இயக்குநருடன் கைகோத்து பிரபல நடிகரைக் கதாநாயகானகக் கொண்டு எம்ஜிஆர் பிக்சரஸ் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாக திட்டமிடப்பட்டபோது இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. அந்தக் கனவு நனவாகாத நிலையில், மீண்டும் இளையராஜா சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் வெப் ஃபிலிம் சீரிஸுக்கு ஒப்புக் கொள்ள எங்கள் குழுவின் ஆறு ஆண்டுகால உழைப்பே அடிப்படையாக இருந்தது" என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸின் கலை இயக்கத்தை சாபு சிரிலும், படத்தொகுப்பை ஆண்டனி செய்யவிருக்கிறார்கள். விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஓவியங்களை பாகுபலி புகழ் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மணியன் செல்வம் உடைகள் வடிவமைப்பு மேற்கொள்கின்றனர்.
ஏற்கெனவே சிஜி, ஓவியங்கள் எனப் பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 14ல் வெளியாகிறது. தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி இசையமைப்பு தொடங்குகிறது.
ஆகஸ்ட் 18- ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 முதல் பிரபல ஓடிடி தளத்தில் 9 சீசனாக வெப் ஃபிலிம் சீரிஸாக முதல் எபிசோட் ஒளிபரப்பாகவிருக்கிறது.