ETV Bharat / sitara

இரண்டாம் உலகப் போர் வீரரின் சாகச பயணத்தில் இணையும் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட்! - ஜேமஸ் பாண்ட் நடிகர்

இரண்டாம் உலகப் போர் வீரர், பெர்னார்ட் ஜோர்டன் வாழ்க்கையில் நிகழ்ந்த சாகச நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் புரோஸ்னன்.

Pierce Brosnan to feature in The Last Rifleman
முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் புரோஸ்னன்
author img

By

Published : Sep 2, 2020, 12:20 PM IST

வாஷிங்டன்: அயர்லாந்து இயக்குநர் டெர்ரி லோனே இயக்கும் 'தி லாஸ்ட் ரைஃபில்மேன்' என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் புரோஸ்னன்.

பிரட்டனிலுள்ள கிழக்கு சசெக்ஸ் பகுதியில் இருக்கும் கருணை இல்லம் ஒன்றில் வாழ்ந்து வந்த பெர்னார்ட் ஜோர்டன், அங்கிருந்து தப்பித்து டி-டே நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற சுவாரஸ்ய பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது 'தி லாஸ்ட் ரைஃபில்மேன்'. வடமேற்கு ஐரோப்பா பகுதியை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனி படையை பின்நோக்க வைப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் விமான, கப்பல் படைகள் ஒன்றாக இணைந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள நார்மாண்டி என்ற இடத்தில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிகழ்வு டி-டே தரையிறக்கம் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இந்த டி-டே தரையிறக்கத்தை நினைவுகூறும் விதமாக, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 70வது டி-டே நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு, 89 வயதான இரண்டாம் உலகப் போர் நாயகன் பெர்னார்ட் ஜோர்டன் தான் தங்கியிருந்த கருணை இல்லத்திலிருந்து, பேருந்து மூலம் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்துக்குச் சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் பிரான்ஸுக்கு சாகச பயணம் செய்துள்ளார்.

இப்பயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பியர்ஸ் புரோஸ்னன் நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. படத்தை அயர்லாந்தைச் சேர்ந்த டெரி லோனே இயக்கவுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, சமீபத்தில் இரண்டாம் உலகப் போரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. எனவே அதுபற்றிய ஒரு கதையை சொல்ல இது சரியான நேரம் என நினைக்கிறேன் என்றார்.

படம் குறித்து திரைக்கதை ஆசிரியர் கெவின் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறியதாவது, பெர்னார்ட் ஜோர்டனின் துணிச்சல் மிக்க இப் பயணம் ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளிவில் பேசப்பட்டது. மேலும், இந்நிகழ்வு இரண்டாம் உலகப் போர் தலைமுறையினரின் விடா முயற்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்ததாகவும் பலரால் புகழப்பட்டது.

வலி மிகுந்த நினைவுகளை நோக்கிய தேடலுடன், தனது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் மனிதரின் இந்தப் பயணம் என்னை மிகவும் ஈர்த்தது என்றார்.

சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை கேட்டி ஜாக்சன் தயாரிக்கிறார். ஜேமஸ் பாண்ட் படங்களில் அதிரடி நாயகனாக வலம் வந்த பியர்ஸ் புரோஸ்னன், இந்தப் படத்தில் மாறுபட்ட வேடத்தில் தோன்றவுள்ளாராம்.

இதையும் படிங்க: வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்த ஜானி டெப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.