பிக் வே பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மருத' எனும் திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணா இயக்கி நடித்துவருகிறார். முற்றிலும் கிராமியப் பின்னணியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகை ராதிகா, பருத்திவீரன் புகழ் செவ்வாழை சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகை சரிதாவின் தங்கையும் தில்லு முல்லு, மதயானைக் கூட்டம் திரைப்படங்களில் நடித்த நடிகையுமான விஜியின் மகள் ’லவ்லி’ என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்ய, இணை இயக்குநராக அருண் பணியாற்றும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டியில் இன்று நடைபெற்றுவந்த இப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் சரவணனும் அவரது மனைவியும் தங்களது மகன் தீரஜ் கார்த்திக்கின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளை நடிகை ராதிகா சரத்குமார், படப்பிடிப்புக் குழுவினர் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இதையும் படிங்க:
'கதாநாயகன் வேறு; கதையின் நாயகன் வேறு' - ஆடுகளம் நரேன் பளீச்!