நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ’ஏ1’. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் இயக்குநர் ஜான்சனுடன் கூட்டணி அமைத்துள்ளர்.
‘பாரீஸ் ஜெயராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இளஞ்சிவப்பு நிறத்தில், கண்ணாடி அணிந்து மிகவும் மாஸாக சந்தானம் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
-
Bacha Bachike Namaste 🙏🏻😃#ParrisJeyaraj#JohnsonK @Music_Santhosh @kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj#A1Combo’SNext pic.twitter.com/fkklZzWkGC
— Santhanam (@iamsanthanam) December 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bacha Bachike Namaste 🙏🏻😃#ParrisJeyaraj#JohnsonK @Music_Santhosh @kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj#A1Combo’SNext pic.twitter.com/fkklZzWkGC
— Santhanam (@iamsanthanam) December 1, 2020Bacha Bachike Namaste 🙏🏻😃#ParrisJeyaraj#JohnsonK @Music_Santhosh @kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj#A1Combo’SNext pic.twitter.com/fkklZzWkGC
— Santhanam (@iamsanthanam) December 1, 2020
இப்படத்தில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற, லார்க் ஸ்டுடியோஸ் படத்தைத் தயாரித்துவருகிறது. விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகரும் எம்.பி.-யுமான சன்னி தியோலுக்கு கரோனா உறுதி