ETV Bharat / sitara

'பரியேறும் பெருமாள் இனி மானுட சமூகத்தின் பிரதி' - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 'பரியேறும் பெருமாள்' படம் பற்றி இடம்பெற்ற கேள்வி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Director Mari selvaraj
இயக்குநர் மாரி செல்வராஜ்
author img

By

Published : Jan 4, 2021, 9:46 AM IST

சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் இனி மானுட சமூகத்தின் பிரதியாக மாறியுள்ளதாக, அந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில், "பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி, அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட் பதிவுடன் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், நடிகர் கதிர், நடிகை ஆனந்தி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆகியோரின் பெயர்களையும் டேக் செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஒடுக்குமுறை, பாகுபாடு ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்தது. கதிர், 'கயல்' ஆனந்தி, யோகி பாபு, 'பூ' ராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, பல விருதுகளையும் வாரிக் குவித்தது.

சிறந்த படத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற இந்தப் படத்தை குறிப்பிட்டு, அதன் மீதான விமர்சனம் குறித்து நான்கு பதில் கொடுக்கப்பட்டு, ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதுடன் செய்தியாகவும் ஊடகங்களில் வெளியாகின.

இதைத்தொடர்ந்து 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தால் நிகழ்ந்திருக்கும் தாக்கம் குறித்து தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இப்படத்தின் கதாநாயகன் கதிர் தனது ட்விட்டரில், 'பரியேறும் பெருமாள்' படம் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்வி வந்திருப்பது, கனவுகளுக்கும் அப்பாற்பட்டவை. இனி, எப்போதும் இந்தப் படம் எங்களை பெருமை அடையச் செய்யும். எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். எங்களது படக்குழுவினருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகனை வைத்து முத்தக்காட்சி இயக்கியது குறித்து டேவிட் தவான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.