ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம், கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற, ஒரு அடார் லவ் திரைப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு இயக்கும் 'தமாக்கா' படத்தில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
![Nikki Galrani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4915024_nikki.jpg)
முழுநீள காமெடி படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், அருண், முகேஷ், ஊர்வசி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
குட் லைன் புரோடக்ஷன் நிறுவனம் சார்பில் எம்.கே. நாசர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு தயாராகிவருகிறது.
![Nikki Galrani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4915024_nikki123.jpg)
நிக்கி கல்ராணி தற்போது தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜவம்சம் திரைப்படத்திலும், மலையாளத்தில் இதிஹாசா 2 படத்திலும் நடித்து வருகிறார்.
![Nikki Galrani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4915024_nikki12.jpg)
சமீபத்தில் பிரபுதேவாவுடன் இவர் நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படம், மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.