அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'ஓ மை கடவுளே'. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையில் படம் வெளியாகும் முன்பே, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியது. அதையும் அஷ்வத் மாரிமுத்து இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பட வேலைகள் தொடங்குவதில் தாமதம் நீடிக்கிறது.
இந்நிலையில் தெலுங்கை தொடர்ந்து தற்போது 'ஓ மை கடவுளே' படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நேரலையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறேன். இதைத்தொடர்ந்து இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. இதுதவிர்த்து தமிழிலும் அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் புதிய வாழ்கையை தொடங்குகிறேன் - 'தில்' ராஜூ