இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஆக. 15) அறிவித்தார். இவரின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி திரையுலகப் பிரபலங்கள் வரை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் தோனி ஓய்வு பெற்றது குறித்து பாலிவுட் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவை பின்வருமாறு:
அனுஷ்கா ஷர்மா:
எங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்ததற்கு நன்றி தோனி.
வருண் தவான்:
நன்றி மகேந்திர சிங் தோனி.
நடிகர் விக்கி கவுஷல்:
என்ன ஒரு இன்னிங்ஸ்! எல்லாவற்றிற்கும் நன்றி தோனி!