ETV Bharat / sitara

யு/ஏ பெற்றது நிவின் பாலியின் 'மூத்தோன்' !

author img

By

Published : Nov 1, 2019, 12:00 AM IST

நடிகர் நிவின் பாலியின் நடிப்பில் வெளிவரப்போகும் 'மூத்தோன்' திரைப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்று கிடைத்துள்ளது.

nivin pauly starrer moothon

நடிகர் நிவின் பாலியின் அசாதாரணமான நடிப்பில் வெளிவரப்போகும் திரைப்படம் 'மூத்தோன்'. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் படக்குழு இப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழை பெற்றுள்ளது. மும்பையில் தன் அண்ணனை தேடி வரும் சகோதரனை மையப்படுத்திய இப்படம் கிரைம் ஜானரில் உருவாகியுள்ளது.

வரும் நவம்பர் 8ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோபிதா துலிபாலா, ரோஷன் மேத்யூ, சஷாங்க் அரோரா, திலேஷ் போதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. நிவின் பாலியின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'பிகில்' நடிகைகளுடன் அட்லி டிக்-டாக்! இணையத்தில் பரவும் வீடியோ

Intro:Body:

cinema update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.