ETV Bharat / sitara

நயன்தாராவின் நெற்றிக்கண் டைட்டில் டிராக் வெளியீடு - Netrikann song released

நடிகை நயன்தாரா நடித்துள்ள, 'நெற்றிக்கண்' படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்
author img

By

Published : Aug 5, 2021, 2:24 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா நடிப்பில் ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து படங்கள் வெளியாகின்றன. இவர் நடிப்பில் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மிலந்த் ராவ் படத்தை இயக்கியுள்ளார்.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

இந்நிலையில், 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் டைட்டில் டிராக் இன்று (ஆக. 5) வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை குவித்துவருகிறது.

காவல் துறை அலுவலராக நடிக்கும் நயன்தாரா ஒரு விபத்தில் கண் பார்வை இழக்க, அவர் வேலை போகிறது. இதற்கிடையில் சைக்கோ கடத்தல்காரர் ஒருவர் மக்களுக்குப் பிரச்சினை தர அதிலிருந்து அவர் மற்றவர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. 'நெற்றிக்கண்' வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இதையும் படிங்க: ’டான்’ படப்பிடிப்பு: பொள்ளாச்சி செல்லும் சிவகார்த்திகேயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.