ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண்

author img

By

Published : Aug 13, 2021, 1:44 PM IST

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நெற்றிக்கண்
நெற்றிக்கண்

'அவள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'நெற்றிக்கண்'. இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

'ப்ளைண்ட்' என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. முதன்முறையாக பார்வை மாற்றுத் திறனாளி பெண்ணாக நயன்தாரா இதில் நடித்திருக்க அவருடன் அஜ்மல் நடித்துள்ளார்.

ஓடிடியில் வெளியான நெற்றிக்கண்
ஓடிடியில் வெளியான நெற்றிக்கண்

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படம் இன்று (ஆக.13) டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக இதே டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிச்சுத் தூக்கிய அஜித் பாட்டு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.