ETV Bharat / sitara

சுட்டெரிக்கும் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' ட்ரெய்லர்! - நெற்றிக்கண் ட்ரெய்லர்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara
author img

By

Published : Jul 29, 2021, 2:19 PM IST

Updated : Jul 29, 2021, 8:16 PM IST

இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படம் ’ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

மிலந்த் ராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கரோனா பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

'நெற்றிக்கண்' படத்தில் நயன்தாரா பார்வை மாற்று திறனாளியாக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கிரிஷ் இசையமைத்துள்ளார். நயன்தாரா முதன்முறையாக பார்வை மாற்று திறனாளியாக நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே 'நெற்றிக்கண்' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

  • இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும்! இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் #Netrikann Streaming from August 13th in Tamil, Telugu, Kannada and Malayalam.#NetrikannTrailer for you all 🎥 https://t.co/lN2XyIVDMK

    — Nayanthara✨ (@NayantharaU) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், 'நெற்றிக்கண்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லருடன் இப்படம் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் இரண்டாவது படம் இதுவாகும். முன்னதாக 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நயன்தாரா புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Last Updated : Jul 29, 2021, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.