ETV Bharat / sitara

Nayanthara Birthday: லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா இன்று (நவம்பர் 18) தனது 37ஆவது பிறந்தநாளைக் (Nayanthara Birthday) கொண்டாடிவருகிறார்.

நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்
நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்
author img

By

Published : Nov 18, 2021, 6:58 AM IST

'மனசினகாரே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. இதனையடுத்து தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பாதித்தார்.

ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனைத்து டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்து அசத்திவருகிறார், ஹீரோக்களுடன் டூயட் பாடும் நடிகையாக மட்டுமில்லாமல் அவர், நாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களிலும் நடித்து வெற்றி கண்டுவருகிறார்.

சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பயணித்துவரும் இவருக்குத் தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று (நவம்பர் 18) தனது 37ஆவது பிறந்தநாளைக் (Nayanthara Birthday) கொண்டாடிவருகிறார்.

நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.இதன் ஒருபகுதியாக இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இரவு 12 மணிக்கு அவருக்கு ஐந்து கேக்குகளுடன் நண்பர்களுடன் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.

இதையும் படிங்க: காதலர் கையை விடாமல் பற்றிக்கொண்ட நயன்தாரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.