ETV Bharat / sitara

'நவரசா' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்! - நவரசா வெளியாகும் தேதி

'நவரசா' திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து தமிழ்த் திரைத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு நல உதவிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

navarasa
navarasa
author img

By

Published : Mar 29, 2021, 5:18 PM IST

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில், ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து ஒன்பது நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கிவருகின்றனர்.

இந்தப் படத்தை கே.வி. ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த் சாமி ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஊதியமின்றி பணிபுரிந்துவருகின்றனர்.

இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவுவதற்காக இந்தப் படத்தை எடுத்துவருகின்றனர்.

தற்போது இந்தப் படத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து தமிழ்த் திரைத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு நல உதவிகளைத் தயாரிப்பு தரப்பினர் செய்துவருகின்றனர். 'நவரசா' படக்குழுவினருக்கு இது குறித்து மணிரத்னம் - ஜெயேந்திரா சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

navarasa
'நவரசா' படக்குழுவினருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி

அதில், "'நவரசா' மூலமாகக் கிடைக்கும் நன்மையை துறையில் நமது சகப் பணியாளர்களுக்கு பூமிகா டிரஸ்ட், ஃபெப்ஸி மூலமாக விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது ப்ரீபெய்டு கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார்டுகள் ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவருக்கும் இந்தக் கார்டு மூலம் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இது ஐந்து மாதங்கள் தொடரும். இதை வைத்து மளிகைச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். இதனால் பயனடைவர்களை அடையாளம் காணும் பணி ஆறு மாதங்களாக ஃபெப்ஸி அமைப்புடன் சேர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. நீங்கள்தான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறீர்கள். நமது துறை, அதன் உறுப்பினர்களுக்காகக் காட்டும் அக்கறையை விரைவில் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என நம்புகிறோம் நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.