ETV Bharat / sitara

பாரதிராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க திரைப்பிரபலங்கள் கோரிக்கை! - தாதா சாகேப் பால்கே விருது

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூலை17) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாரதிராஜா
பாரதிராஜா
author img

By

Published : Jul 17, 2020, 4:13 PM IST

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று(ஜூலை 17), தனது 78ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ஏற்கெனவே தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, மாநில விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவருக்கு திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன், மணிரத்னம், சேரன், பாலா, வைரமுத்து உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், 'தென்னிந்தியாவின் இயக்குநர் இமயம், தயாரிப்பாளர், பத்மஸ்ரீ பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்த நன்னாளில் எங்கள் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன், முதலில் அவருடைய சாதனைகளைப் பட்டியலிட விரும்புகிறோம்.

இந்திய சினிமாவுக்கு இயக்குநர் பாரதிராஜாவின் பெருமைமிகு பங்களிப்புகள்:
1977 முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது நிறைவான பங்களிப்பு.
வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக் கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களை இயக்கியவர், பாரதிராஜா.

  • மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளை மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கி, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராக விளங்குகிறார். படைப்பாளிகளுக்கு உத்வேகம் ஊட்டும் சக்தியாகவும் திகழ்கிறார்.
  • சிவாஜி கணேசன், ராஜேஷ் கண்ணா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அமோல் பலேகர், நானா படேகர், சன்னி தியோல், சுஹாசினி மணிரத்னம், பூனம் தில்லான், ராதிகா சரத்குமார், விஜயசாந்தி, ரதி அக்னிஹோத்ரி, ரேவதி, ஜெயசுதா உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களையும் இயக்கியவர்.
  • சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில், உருவாகி வந்த தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர், அவர் தான். உண்மையாக மக்கள் வாழும் பகுதிகளில் திரைப்படங்களைப் படமாக்கியதன் மூலம் புதிய புரட்சியை உருவாக்கியவர்.
  • அவரது வருகையும், அவரால் உருவாக்கப்பட்ட புதிய அலையும் பல புதிய திறமைசாலிகளை இந்திய சினிமாவுக்குக் கொண்டு வந்தன.
  • கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
  • புகழ் பெற்ற பாடலாசிரியரும் ஏழு முறை தேசிய விருது பெற்றவருமான கவிப்பேரரசு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவரும் அவர் தான். 50-க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர், பாரதிராஜா.
  • பாரதிராஜா தன்னுடைய திரைப்படங்களுக்காக, இந்திய அரசிடமிருந்து ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளார்.
  • 2017-ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் நடுவர் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
  • ஆறு முறை தமிழ்நாடு அரசின் விருதை வென்றுள்ளார்.
  • அவர் இயக்கிய தெலுங்குப் படத்துக்காக, ஆந்திர பிரதேச மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதை வென்றார்.
  • 2004-ஆம் ஆண்டில் மதிப்பிற்குரிய பத்மஸ்ரீ விருதை வழங்கி, இந்திய அரசு அவரைக் கெளரவித்தது.
    மேலே உள்ள பட்டியலில் இடம் பெற்றவை, இந்த மாபெரும் திரை இயக்குநரின் சில சாதனைகள் மட்டுமே. தன் திரைப்படங்கள் மூலம், அவர் தொடர்ந்து புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு உந்துதலாகத் திகழ்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார்.
    பாரதிராஜா தன்னுடைய 78-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டுள்ள படைப்பாளிகளாகிய நாங்கள், இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான பெருமதிப்புக்குரிய 'தாதாசாகேப் பால்கே' விருதை இந்த ஆண்டு பாரதிராஜாவுக்கு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கருப்பர் கூட்டம் ஒரு காட்டுமிராண்டி கூட்டம்' - இயக்குநர் பேரரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.