ETV Bharat / sitara

மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசை - நானி

நடிகர் நானி தனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை எனத் தெரிவித்துள்ளார்.

nani
nani
author img

By

Published : Dec 17, 2021, 2:18 PM IST

ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்'. இதில் நானியுடன் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 24ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 16) சென்னையில் நடைபெற்றது. இதில் நானி, சமுத்திரக்கனி, சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் படம் பார்க்கும் உணர்வு

இவ்விழாவில் பேசிய சாய் பல்லவி, "எப்போதுமே நான் ஒரு கதையைப் படிக்கும்போது, மனத்தில் விஷுவலாக தமிழில்தான் தெரியும். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். இந்தப் படக்கதை படிக்கும்போது நம் மொழியில் எடுக்கலாமே எனத் தோன்றியது.

அப்போது தயாரிப்பாளர் நான்கு மொழிகளில் எடுப்பதாகச் சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தமிழ்ப் படம் பார்க்கும் உணர்வை இந்தப் படம் தரும். இயக்குநரும் அவரது குழுவும் படத்திற்காக நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார்கள். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

நடிகர் நானி பேசுகையில், "நான் ஆரம்பத்தில் சென்னையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போது சமுத்திரக்கனியைப் பார்க்காமல் செல்லமாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும்போது, கமல் ஹாசன் படங்கள்தாம் அதற்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழா
ட்ரெய்லர் வெளியீட்டு விழா

உணர்வுப்பூர்வமான பந்தம்

தமிழ்ப் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். 'நான் ஈ' படத்திற்குப் பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாகப் போகவில்லை.

எனவே தெலுங்கில் கவனம் செலுத்திவிட்டு, தமிழில் சரியான படத்தை செய்யக் காத்திருந்தேன். உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றால் அது மணிரத்னத்துடன்தான். அவர் படங்களைப் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன்.

நான் கமல் ஹாசன், ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: தள்ளிப் போகாதே புதிய ரிலீஸ் தேதி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.