தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது தமிழ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக அவர் வித்தியாசமான கெட்டப்களில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புதிய படத்தில் பாலகிருஷ்ணாவுடன் வேதிகா, சோனல் சௌகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாலகிருஷ்ணாவுடன் சோனல் இணையும் மூன்றாவது திரைப்படம் இது, முன்னதாக 'லெஜண்ட்', 'டிக்டேட்டர்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், புதிய படத்தில் பாலகிருஷ்ணா புதுவிதமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரது ரசிகர் ஒருவர் அவருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் புதிய லுக்குடன் அசத்தலாக உள்ளார் பாலகிருஷ்ணா. அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.