கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம், 'நாய் சேகர்'. ஜார்ஜ் மரியன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம், 'கலக்கப் போவது யாரு' பாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு.
![நாய் சேகர் படக்குழுவினர் வெட்டிய கேக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14285901_naaisekarr.jpg)
தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் படம் அமைந்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 'நாய் சேகர்' படக்குழுவினர் நேற்று (ஜன.25) கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'தேஜாவு' டீசர்! - உதயநிதி வெளியிடுகிறார்