ETV Bharat / sitara

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: இசையமைக்கும் பணியை தொடங்கிய தமன் - இசையமைக்கும் பணியை தொடங்கிய தமன்

மோகன்லாலின் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக தமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

thaman
thaman
author img

By

Published : Jun 28, 2021, 10:47 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இதனையடுத்து, சிரஞ்சீவியின் 153ஆவது படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளார். சிரஞ்சீவி நடிக்கும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு 'சீரு 153' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு 'ஹனுமன் ஜங்கஷன்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் மோகன் ராஜா இயக்குநராக அறிமுகமானர். அதன் பின் மோகன் ராஜா எந்த தெலுங்கு படத்தையும் இயக்கவில்லை. சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. 'லூசிஃபர்' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், இப்படத்திற்கான இசையமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தமன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தானும் மோகன் ராஜவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உங்களை உத்வேகப்படுத்தும் நினைவுகள் தான் முக்கியம் 'லூசிஃபர்' குறித்து மனம் திறந்த பிரித்விராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.