திரையில் ரசிகர்களைக் கவர்ந்த விக்ரம் வேதா, கைதி, அடங்க மறு, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர், சாம் சி.எஸ். இவர் ஆன்லைன் மோசடியில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது சகோதரர் பிறந்தநாளுக்கு பிளிப்கார்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் கடிகாரம் ஆர்டர் செய்ததாகவும், ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் அனுப்பிய பார்சலில் ஆப்பிள் கடிகாரத்துக்கு பதிலாக கல்லை வைத்து பார்சல் செய்து அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி நூதன மோசடி - ஆன்லைனில் பொருள் வாங்கும் போது உஷார்...!
இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இசைமைப்பாளர் சாம் புகார் அளித்ததாகவும், ஆனால் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை திருப்பி தர இயலாது என்று பதிலளித்துவிட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இனி யாரும் ப்ளிப்கார்டில் பொருள்கள் வாங்காதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சாமிற்கு பிளிப்கார்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், ”இந்த சம்பவத்தைக் குறித்து வருந்துகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள லிங்க் மூலமாக உங்கள் ஆர்டர் பற்றிய தகவலை கொடுத்தால் உதவுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு பிளிப்கார்ட் ப்ராடு என்ற பெயரில் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதே நேரத்தில் பிரபலங்கள் பாதிப்படைந்தால் மட்டும் பிளிப்கார்ட் நிறுவனம் உடனடியாக உதவ வருகிறது என பொதுமக்கள் பலர் அதே பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:அனிருத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி - இசையமைப்பாளர் சாம்