நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகை ஊர்வசி அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தை தற்காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஜேஎஸ்பி மூவி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாரும், இயக்குநர் பாக்கியராஜும் இணைந்து பணியாற்றவுள்ளனர். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.
விரைவில் இந்தப் படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'முந்தானை முடிச்சு' படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! - ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படங்கள்
சென்னை : நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி, மெகா ஹிட் அடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் ரீமேக் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.