மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், விர்சு ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவல் ‘அதர்வா - தி ஆரிஜின்’. இந்நாவலில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும் தோன்றுகிறார்.
இதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை இன்று (பிப்.2) தோனி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார்.
மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் கதையை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார்.
எம்விஎம் வேல் மோகன், வின்சென்ட் அடைக்கலராஜ், அசோக் மேனர் உள்ளிட்டோரால் 150-க்கும் மேற்பட்ட உயிரோட்டமான வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நாவல் குறித்து எம்.எஸ்.தோனி பேசுகையில், “இந்த பிரமாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
'அதர்வா - தி ஆரிஜின்' நாவலானது ஈர்க்கும் கதை, அதி அற்புதமான கலைத்தன்மை கொண்டதாகும்.
எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சமகாலத்திய தொடர்புடன், இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே ஈர்க்கப்பட்டேன்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மோஷன் போஸ்டர் என்பது அதர்வாவின் மயக்கும் உலகத்திலிருந்து ஒரு துளி நீர் மட்டுமே. இது ரசிகர்கள் அனைவரையும் இன்னும் வெகுவாக ஆச்சரியப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் முன்கூட்டிய ஆர்டர் இந்த மாதத்தில் தொடங்குவதுடன், நாவலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த கிராஃபிக் நாவல் தோனியின் முதல் ஃபேண்டஸி பிக்சன் அவதாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிரத்னம், சங்கர் மகாதேவனுக்கு 'பாரத் அஷ்மிதா' விருது