சென்னை: பப்ஜி வீரனாக மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் பப்ஜி படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
பிரபல சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் முதன்முறையாக ஹீரோவாக களமிறங்கும் படம் பவுடர். இப்படத்தை விஜய் ஶ்ரீ ஜி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
பப்ஜி வீரனாக மொட்டை ராஜேந்திரன் இந்நிலையில், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பப்ஜி (பொல்லாத உலகின் பயங்கர கேம்) படத்தின் படப்பிடிப்புகள் கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.பப்ஜி வீரனாக மொட்டை ராஜேந்திரன் விக்ரம் தங்கை அனிதா மகன் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா, மைம்கோபி, அனித்திரா நாயர், சாந்தினி தேவா, லட்சுமி, மொட்டை ராஜேந்தின், ஜூலி, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடிக்க பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.பப்ஜி வீரனாக மொட்டை ராஜேந்திரன் ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் இந்த வருட இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர இப்படத் தாயரிப்பு நிறுவனமான ஜி மீடியா முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க: பிரபல வில்லன் நடிகர் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி புகார்