ETV Bharat / sitara

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு வாழ்த்துக்கூறிய நடிகர் மோகன்லால்

author img

By

Published : Dec 27, 2020, 4:45 PM IST

இந்தியாவின் இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு நடிகர் மோகன்லால் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

இந்தியாவின் இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு, மலையாளத் திரைப்பட நடிகர் மோகன்லால் வாழ்த்துக் கூறியுள்ளார். தொலைபேசி வாயிலாக ஆர்யாவைத் தொடர்புக்கொண்டு பேசிய அவர், வரும் காலங்களில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் முன்னெடுக்கும் அனைத்து செயல்களும் வெற்றிப்பெற வாழ்த்துவதாகவும், அவரது நிர்வாக தலைமையின் கீழ் திருவனந்தபுரம் மேலும் சிறப்பாகவும், அழகாகவும் மேம்பட வாழ்த்துவதாகக் கூறியுள்ளார். தனது திருவனந்தபுரம் வருகையின் போது அவரை நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆர்யா, மோகன்லாலின் இந்த திடீர் தொலைபேசி அழைப்பு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். முன்னதாக, கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, 21 வயது இளம் பெண் ஆர்யா ராஜேந்திரன், 549 வாக்குகள் வித்தியாசத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தந்தை கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகராக இருந்த நிலையில், சிறு வயதிலிருந்தே ஆர்யாவுக்கு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணிபுரியும் ஆர்வம் இருந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த பின்பு அக்கட்சியின் மாணவர் அணி கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது அம்மாவட்டத்தின் ஆல்செயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம், இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: 'இடதுசாரி சித்தாந்தமே சரியானது'- ஆர்யா ராஜேந்திரன் சிறப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.