'மிக மிக அவசரம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். விஜயின் 'புதிய கீதை', 'ராமன் தேடிய சீதை' படங்களை இயக்கிய ஜெகன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
ஸ்ரீபிரியங்கா, 'வழக்கு எண் 18/9' முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் காவலர்களுக்கு மேல் அதிகாரிகளால் ஏற்படும் அவஸ்தைகளையும், அவமானங்களையும் அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.
-
Exclusive #MMAfromNov8#MigaMigaAvasaram Nov 8 Release
— LIBRA Production (@LIBRAProduc) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
A @LIBRAProduc release@sureshkamatchi @i_Arishkumar @SriPriyajoe @ishaandev @bhalabharani @jagan_dir @johnmediamanagr @lightson_media pic.twitter.com/gGC47OZtP6
">Exclusive #MMAfromNov8#MigaMigaAvasaram Nov 8 Release
— LIBRA Production (@LIBRAProduc) October 14, 2019
A @LIBRAProduc release@sureshkamatchi @i_Arishkumar @SriPriyajoe @ishaandev @bhalabharani @jagan_dir @johnmediamanagr @lightson_media pic.twitter.com/gGC47OZtP6Exclusive #MMAfromNov8#MigaMigaAvasaram Nov 8 Release
— LIBRA Production (@LIBRAProduc) October 14, 2019
A @LIBRAProduc release@sureshkamatchi @i_Arishkumar @SriPriyajoe @ishaandev @bhalabharani @jagan_dir @johnmediamanagr @lightson_media pic.twitter.com/gGC47OZtP6
சமீபத்தில் இந்தப் படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சியாக காட்டப்பட்டது. இதையடுத்து இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று வெளியாகமல் தள்ளிப்போனது. இந்த நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் வாசிங்க: சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் - ரவீந்தர் சந்திரசேகரன்