ETV Bharat / sitara

இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் - 'மிக மிக அவசரம்' பட நாயகி பிரியங்கா

'மிக மிக அவசரம்' திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் அப்படத்தின் நாயகி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Actress Priyanka
author img

By

Published : Nov 12, 2019, 3:24 PM IST

புதுச்சேரி: மிக மிக அவசரம் திரைப்படத்தின் நடிகை பிரியங்கா உள்ளிட்ட படக்குழுவினர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிக மிக அவசரம். பெண் காவலர்கள் படும் அவஸ்தைகளையும் அவமானங்களையும் விவரிக்கும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே இத்திரைப்படத்தின் படக்குழுவினர் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மிக மிக அவசரம் படக்குழுவினர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது

பின்னர் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த நடிகை பிரியங்கா, "மிக மிக அவசரம் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். பெண்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதற்கு தீர்வு கிடைக்கிறதா என்பதுதான் படத்தில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. நான் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவள். எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்தார்

மேலும், சினிமா தொழிலில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று கூறிய அவர், மிக மிக அவசரம் திரைப்படம் தனக்கு ஒரு சவால் கொடுக்கக்கூடிய திரைப்படமாக இருந்ததாகக் கூறினார். மேலும் இத்திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Intro:மிக மிக அவசியம் திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் அப்படத்தின் நாயகி பிரியங்கா தெரிவித்துள்ளார்

Body:மிக மிக அவசரம் படக்குழுவினர் இன்று புதுச்சேரி வந்தனர் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் நாராயணசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர் படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சி படத்தின் நாயகி புதுச்சேரி சேர்ந்த பிரியங்கா ஆகியோர் வாழ்த்தினர்

பின்னர் இடிவி பாரத்திற்காக பிரத்யேகப் பேட்டி அளித்த அவர் மிக மிக அவசரம் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்றும் பெண்கள் ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு தீர்வு கிடைக்கிறதா என்பது தான் படத்தின் முக்கியமாக சொல்லப் படுவதாக அவர் தெரிவித்தார்

மேலும் தான் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்

இந்தப்படத்தில் என் கேரக்டர் சாமந்தி என்று இது பெண் காவலர் ஆக நான் நடித்துள்ளேன் என்பதை சொல்வதைவிட இயல்பாக நான் சாமந்தி இருந்தால் என்ன செய்திருப்பேன் அதைத்தான் இந்தப் படத்தில் செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார் சினிமா தொழில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றும் அவர் கூறினார் எனவே மிகமிக அவசியம் திரைப்படம் எனக்கு ஒரு சவால் கொடுக்கக்கூடிய திரைப்படம் அனைவரின் நம்பிக்கையும் இந்த படம் பெற்றுத்தரும் என்றார்

Conclusion:மிக மிக அவசியம் திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம் என்று அப்படத்தின் நாயகி பிரியங்கா தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.