ETV Bharat / sitara

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தனது மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் ஜாக்சன்
author img

By

Published : Mar 19, 2019, 4:35 PM IST

இந்த உலகமே வியந்து பார்க்கக் கூடிய வகையில் பாப் பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். உலக நாடுகளே அவருக்கு அஞ்சலி செலுத்தின.

இவருக்கு பாரிஸ் ஜாக்சன் என்ற மகளும், ஜோன்ஸ் ஜான்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் 'லீவிங் நெவெர்லாண்ட்' (leaving neverland) என்ற ஆவணப்படம் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவயது குழந்தைகளை தவறாக பயன்படுத்தியிருந்தாக காட்டப்பட்டிருந்தது.

பயங்கர சர்ச்சையை கிளப்பிய இந்த ஆவணப்படத்தை எதிர்த்து மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்து தங்களது கண்டனங்களையும் பதிவு செய்தனர். லீவிங் நெவர்லாண்ட் ஆவணப்படத்தால் மன உளச்சலுக்கு ஆளான மைக்கேல் ஜாக்சனின் மகளும் மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் பாரிஸ் ஜாக்சனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனை பாரிஸ் ஜாக்சன் மறுத்து வந்தார். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி கடந்த சனிக்கிழமை வெளியே செல்லும் புகைப்படத்தை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.

மேலும், இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பாரிஸ் ஜாக்சனுக்கு வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு பாரிஸ் ஜாக்சன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.