தமிழில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் ரசிகர்களிடம் உரையாடியபோது, உங்களுக்கு சினிமாவில மீ டூ பிரச்னை இருந்ததா என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பிள்ளார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த ஷாலு ஷம்மு எனக்கு மீ டூ பிரச்னை நடந்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரபல இயக்குநர் ஒருவர் கேட்டார் அதற்கு முடியாது என்று கூறி விட்டேன் என்று பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த பதிலால் தற்போது சினிமா வட்டாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.