அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடிகரான பிரய்யன் டரென்டினா(60). இவர் நாடகம், தொலைகாட்சித் தொடர், திரைப்படங்கள் என பலவற்றிலும் நடித்து பிரபலமடைந்தவர். அதிலும் குறிப்பாக 2017ஆம் ஆண்டு இவர் நடித்த தி மார்வலஸ் மிஸ்ஸஸ் மெய்சல் என்ற தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான பிரைம்டைம் எம்மி விருதையும் பெற்றது.
இதனிடையே, அமெரிக்காவின் மான்ஹாட்டனில் வசித்துவந்த பிரய்யன் டரென்டினா, கடந்த நவம்பர் 2ஆம் தேதி அவரது வீட்டில் இறந்த நிலையல் மீட்கப்பட்டார். மயங்கிய நிலையில் கிடந்த நபர் குறித்து நியூயார்க் நகர காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற அவர்கள் படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்த பிரய்யனை மீட்டனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பிரய்யனின் இந்த மரணம் பெரும் சந்தேகத்தை எழுப்பியது. அவரது மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இதனிடையே தற்போது நியூயார்க் நகர தலைமை மருத்துவ பரிசோதனை அலுவலகம் பிரய்யனின் மரணத்திற்கான காரணத்தை அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய மருத்துவ அலுவலக செய்தித் தொடர்பாளர், பிரய்யன் டிரென்டினா, ஹெராயின், கோகெயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகளவில் எடுத்துக் கொண்டதே அவரது மரணத்திற்கு காரணம். அவரது மரணம் ஒரு விபத்து என்றும் தெரிவித்தார்.
போதைப் பொருளால் உயிரிழந்த பிரய்யன் டரென்டினாவிற்கு ஒரு மகன் உள்ளார். இவர் கில்மோர் கேர்ள்ஸ், தி பிளாக் டான்லிஸ், ஹீரோஸ், ல அண்ட் ஆர்டர், தி குட் வைஃப் உள்ளிட்ட தொலைகாட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: நான் ‘அவர்களை’ அறைந்துள்ளேன் - ராணி முகர்ஜி!