ETV Bharat / sitara

இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி! - மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னம் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிரத்னம்
author img

By

Published : Jun 17, 2019, 11:38 AM IST

Updated : Jun 17, 2019, 5:32 PM IST

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம். தமிழ் சினிமாவில் மெளனங்களில் வசனம் படைக்கும் இயக்குநராக திகழ்கிறார். இவர் அதிகம் பேசுவதில்லை; ஆனால் இவரது படங்கள் பலரது மனதிற்கு வெளிச்சமாய் நிற்கிறது. மெளனராகம், நாயகன், தளபதி, இந்திரா, பம்பாய், அலைபாயுதே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதே இவரது வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு வெளியானது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இப்படத்திற்கான பணிகளைத் தொடங்குவதற்கு தீவிரம்காட்டி வந்தார். இந்நிலையில், திடீர் நெஞ்சு வலி காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மணிரத்னத்தின் உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 17, 2019, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.