மம்முட்டி நடிப்பில் உருவாகிவரும் ’மாமாங்கம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாள மொழிப் படமான இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
கேரளாவின் மலபார் பகுதியை அடிப்படையாகக் கொண்ட 'மாமாங்கம்' எனப்படும் விழாவை மையமாய்க்கொண்டு, இப்படம் உருவாகியுள்ளது. மேலும் 1965ஆம் ஆண்டினை மையப்படுத்திய வரலாற்றுக் கதையாகவும், 280 வருடப் போரின் வீரியத்தைப் பற்றியும் இப்படம் பேசவுள்ளது.
-
Here's the #MamangamTeaser in Tamil, https://t.co/SWPZoDpQrK @mammukka's big action drama that comes by in the third week of November. Interesting premise!
— Sidhu (@sidhuwrites) October 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's the #MamangamTeaser in Tamil, https://t.co/SWPZoDpQrK @mammukka's big action drama that comes by in the third week of November. Interesting premise!
— Sidhu (@sidhuwrites) October 4, 2019Here's the #MamangamTeaser in Tamil, https://t.co/SWPZoDpQrK @mammukka's big action drama that comes by in the third week of November. Interesting premise!
— Sidhu (@sidhuwrites) October 4, 2019
மம்முட்டி இப்படத்தின் கதாநாயகனாகவும், உன்னி முகுந்த் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கும் இத்திரைப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் 'சய் ரா' படத்திற்காக பாராட்டுக்களைப் பெற்ற கமல்கண்ணன் இப்படத்திற்கு VFX அமைத்துள்ளார். எம் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளராகவும், மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.
இப்படம் தற்காப்புக் கலையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்த சமோரியன் ஆட்சியாளர்களை வீழ்த்த சாவெருகள் வீரர்கள் தீட்டிய திட்டம் பற்றியக் கதை என்பதாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை இப்போதே இப்படம் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க:
மும்பை தாக்குதலின் உண்மை கூறும் 'ஹோட்டல் மும்பை' ரிலீஸ் தேதி அறிவிப்பு