ETV Bharat / sitara

முதல் முறையாக ஆண் குரலில் வெளியாகும் கந்த சஷ்டி கவசம்!

author img

By

Published : Sep 22, 2020, 4:05 PM IST

பின்னணி பாடகர் வேல்முருகன் யூ-ட்யூப் சேனலில் இன்று (செப்.22) ஆண் குரலில் உருவாகியுள்ள கந்த சஷ்டி கவசம் பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் வேல்முருகன்  பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்

தமிழ் திரையுலகில் நாட்டுப்புற இசைக்கலைஞர், கின்னஸ் சாதனையாளர், பின்னணி பாடகர் என்று அறியப்படுபவர் வேல்முருகன். இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானவர்.

இந்நிலையில், ’மதுர குலுங்க குலுங்க’, ’ஆடுங்கடா’ உள்ளிட்ட பல கிராமிய திரைப்பாடல்கள் பாடி, இசை ரசிகர்களைக் கவர்ந்த வேல்முருகன், தற்போது சவுண்ட் சர்வீஸ் என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், ”என்னுடைய சவுண்ட் சர்வீஸ் யூ-ட்யூப் சேனலில் இன்று (செப்.22) மாலை ஆறு மணி அளவில், முதன்முறையாக ஆண் குரலில் உருவாகியுள்ள கந்த சஷ்டி கவசம் பாடல் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் ஜுபின் இசையமைத்துள்ள இப்பாடலை அனைவரும் கேட்டு எனக்கு ஆதரவு தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.