ETV Bharat / sitara

வைரமுத்துவிற்கு ஓவியம் பரிசளித்த ஆயுள் தண்டனைக் கைதி! - வைரமுத்துவிற்கு ஓவியம் பரிசளித்த ஆயுள் தண்டனைக் கைதி பாதமுத்து

மதுரை: மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியமுடன், கவிஞர் வைரமுத்து தோழமையுடன் நிற்பது போன்ற ஓவியத்தை ஆயுள் தண்டனைக் கைதி பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோழமை சுட்டும் ஓவியத்தை பரிசளித்த ஆயுள் தண்டனைக் கைதி

author img

By

Published : Nov 1, 2020, 1:24 PM IST

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவிற்கு மதுரை மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி பாதமுத்து தோழமையைச் சுட்டும் ஓவியம் ஒன்றினை பரிசளித்தார்.

கவிஞர் வைரமுத்து மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இருப்பது போன்று பென்சிலால் தீட்டப்பட்ட அந்த ஓவியம் புன்னகையினால் நிறைந்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

அதில்,”எஸ்.பி.பி.யும் நானும்... மதுரை மத்திய சிறைக் கைதி பாதமுத்துவின் கைவண்ணம் கண்டேன். கண்ணீர் கொண்டேன். சிறை செய்ய முடியுமோ சித்திரத்தை? நன்றி”என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பாதமுத்து, கோவையைச் சேர்ந்தவர். தனது மனைவியைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாதமுத்து, இடப்பற்றாக்குறை காரணமாக மதுரை மத்தியசிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். சிறையிலிருந்தவாறே கட்டுரைகள் எழுதுவதிலும், ஓவியங்கள் வரைவதிலும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்.

tweet
கவிஞர் வைரமுத்துவின் ட்விட்

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பிபி மீதிருந்த பற்றுதல், வைரமுத்துவின் கவிதைகள் மேல் இருக்கும் ஆர்வம் ஆகிவற்றின் காரணமாக இருவரையும் வரைந்து சிறைத்துறையின் அனுமதியோடு வைரமுத்துவுக்கு பரிசாக அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'எங்களுக்கு ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் வைரமுத்துதான்' - பாரதிராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.