நடிகை மதுமிதா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர். அதனைத்தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இந்தச் சூழலில் இவருக்கு தமிழ்நாசு அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக வெகு நாள்களாக எந்தவித படப்பிடிப்புகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த மதுமிதா, தற்போது தனது 'கும்பாரி' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: கலைமாமணி விருதுபெற்ற நாதஸ்வர வித்வான் சின்னத்தம்பிக்கு மாலை அணிவித்து மரியாதை!