சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் இன்று (நவம்பர் 25) வெளியாகவிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீரென நேற்று (நவம்பர் 24) மாலை ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் படத்தின் பிரச்சினை முடிந்தநிலையில் இன்று காலை 5 மணிக்குப் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கேடிஎம் பிரச்சினை காரணமாகச் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும், எட்டு மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என தெரிவித்திருந்தது.
-
எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்.
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu
">எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்.
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaaduஎத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்.
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu
இந்நிலையில் பல தடைகளைத் தாண்டி மாநாடு படம் ஒருவழியாக வெளியாகியுள்ளது. இது குறித்துப் படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில், "எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: Maanaadu சிறப்புக் காட்சி ரத்து - தொடர் ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்