ETV Bharat / sitara

'மாமனிதனின்' டப்பிங் தொடக்கம்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'மாமனிதன்' திரைப்படத்தின் டப்பிங் பணி இன்று தொடங்கியது.

Maamanithan
author img

By

Published : Aug 6, 2019, 1:22 PM IST

'நீர்பறவை', 'தென்மேற்கு பருவகாற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. குடும்பம், உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை படங்களில் காட்சிப்படுத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் கருவும், குடும்பம் அதற்கான முக்கியத்துவம், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை வைத்தே நகரும். பெரும்பாலும் இவரது படங்களில் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். இவரது படத்தின் பாடல்கள் தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் புதிய படம் 'மாமனிதன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது டப்பிங் பணி தொடங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

Intro:Body:

இயக்குனர் சீனு ராமசாமி 🎬இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 📽'மாமனிதன்'. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து 🎹இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் 🎙டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. இந்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ✍பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/seenuramasamy/status/1158244321503485952

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.