ETV Bharat / sitara

சினேகன் கார் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு - சினேகன் கார் மோதி விபத்து

புதுக்கோட்டை : திருமயம் அருகே திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் இன்று (நவம்பர் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

lyricist snehan car accident at pudhukottai youth died

author img

By

Published : Nov 20, 2020, 10:52 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் ஆலமரத்து குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு தனது வீட்டிலிருந்து திருமயத்திற்கு இருசக்கர வாகனத்தில் திருச்சி - காரைக்குடி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

lyricist snehan car accident at pudhukottai youth died
சினேகன் கார் மோதி விபத்து

அப்போது புதுக்கோட்டையில் இருந்து சென்ற திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கார் அருண்பாண்டியின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த அருண்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த இளைஞர்

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருண்பாண்டி கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து இன்று (நவ. 20) சிகிச்சைப் பலனின்றி அருண் பாண்டி உயிரிழந்தார். இது குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிந்து கார் ஓட்டி வந்த சினேகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... திருமயம் வாகன விபத்து: கவிஞர் சினேகன் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.